No results found

    பெயரில் அதிர்ஷ்டம் தரும் ஐந்து எழுத்துகள்! #Nuemerology


    பெயரில் உள்ள ஒவ்வோர் அட்சரத்துக்கும் அதன் ஒலி அமைப் பைப் பொறுத்து தனிப்பட்ட சில குணங்களும் ஆற்றல்களும் உண்டு என்கின்றன மேலைநாட்டுப் பெயரியல் ஜோதிடம் சார்ந்த நூல்கள். அவ்வகையில் ஒருவரின் பெயரில் அமைந்துள்ள எழுத்துக்களின் குணம் மற்றும் ஆற்றலைக் கொண்டு அவர்களுடைய குணம் மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் கணிக்கலாம் என்பது பெயரியல் ஜோதிட நிபுணர்களின் கருத்து.

    உலகளவில் பெயர்களில் அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்துகளில் முதல் ஐந்து இடத்தைப் பிடிப்பன A, E, M, S, L ஆகியவையே என்கிறன ஆய்வுக் குறிப்புகள். இந்த எழுத்துகளின் ஆதிக்கத்தை அதிகமாகவோ, அல்லது இவற்றில் ஒன்றை முதல் எழுத்தாகவோ கொண்டு உங்களின் பெயர் அமைந்திருந்தால் என்னென்ன பலன் அமையும்? தெரிந்துகொள்வோமா...

    `A’: இந்த எழுத்தின் ஆதிக்க எண் - 1. ஆதிக்கக் கிரகம் சூரியன். இந்த எழுத்து ஆக்க பலம் கொண்டது. மனிதர்களின் பெயரிலும், தொழில்களின் பெயரிலும் இந்த எழுத்து அதிகம் இடம்பெறுவது சிறப்பு. முதல் எழுத்தாக வருவது மிகவும் விசேஷம் என்பார்கள். இந்த எழுத்து மனித உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் வல்லமை பெற்ற இந்த எழுத்து, வாழ்க்கையை உயர்த்திச் செல்லக்கூடியது. வீழ்ச்சியடையும்போது தடுத்து நிறுத்தும்.

    சாதாரண மனிதரையும் திடீரென மேல்நிலைக்குக் கொண்டு செல்லும் ஆற்றல் கொண்டது. புகழ், கௌரவம், பதவி போன்றவற்றைத் தரும். நேர்மையாக இருக்கச் செய்யும். இதை பெயரின் முதல் எழுத்தாக அமையப் பெற்றவர்கள் மிகவும் புத்திசாலியாகவும் நிர்வாகத் திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். கலைகளில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். தலைமைப் பதவிக்கு உரியவர்கள்.

    `E’: இந்த எழுத்தின் ஆதிக்க எண்: 5. ஆதிக்கக் கிரகம்: புதன் இந்த எழுத்து அதி நுட்பமான மனோசக்திகளை உள்ளடக்கியது. கலைகளில் ஆர்வமும் ஞானமும் இருக்கும். மனதில் படபடப்பு, ஒருவித பய உணர்ச்சி இருக்கும். ஆனாலும், அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். புதுப்புது திட்டங்களை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள்.

    எதையும் முன்கூட்டியே அறியக்கூடிய முன்னெச்சரிக்கை சக்தி உள்ளவராதலால், ஆபத்து வந்தபோதும் நிதானத்துடன் செயல்பட்டு, பூரண வெற்றி பெறுவார்கள். நண்பர்களுக்கு உபகாரியாக இருப்பார்கள். சிறந்த ஆராய்ச்சியாளர். எல்லோரிடமும் வளைந்து கொடுத்துப் போகக்கூடியவர்கள். மற்றவர்களை மிக எளிதில் வசப்படுத்திக் கொள்வார்கள். எழுத்து, ஆராய்ச்சித் துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.

    `M’: இந்த எழுத்தின் ஆதிக்க எண்: 4. ஆதிக்கக் கிரகம்: ராகு. பெயரில் இதை முதலெழுத்தாகவோ அல்லது அதிகமாகவோ கொண்டவர்கள், கூர்மையான அறிவும், கலைகளில் தேர்ச்சியும் பெற்றிருப்பார்கள். திறமைக்கும் மேலாகப் பதவிகள் கிட்டும். கடினமான உழைப்பும், விடாமுயற்சியும் இருக்கும்.

    வாழ்க்கையில் அடிக்கடி மாற்றங்கள் இருக்கும். முக்கியப் பொறுப்புக்களைச் சுலபத்தில் ஏற்கமாட்டார்கள்; ஏற்றுக்கொண்டால், பிறர் உதவி இன்றி, தானே முன்னின்று திறம்படச் செய்து முடித்துவிடுவார்கள். தீர்க்கமான கருத்துக் கள் கொண்டவர்கள். சில நேரம், தொடர்ச்சி யான கவலைகள் உண்டாகி, இவர்கள் மனதை வாட்டும். ஆனால், விரைவிலேயே அதிலிருந்து முற்றிலும் வெளிவந்துவிடுவர். சிறப்பான வெற்றிகளுக்குச் சொந்தக்காரர்; பஞ்சபூதங்களின் சூட்சுமம் அறிந்தவர்கள்.

    `S’: இந்த எழுத்தின் ஆதிக்க எண்: 3. ஆதிக்கக் கிரகம்: குரு பகவான்.

    இவர்களின் மனதில் தீவிர கருத்துக்கள் உதிக்கும். நன்மை யும் தீமையும் கலந்த குணம் இருக்கும். சண்டைக்கும் காரணமாக இருப்பார்கள்; சமாதானத்துக்கும் கர்த்தாகவும் திகழ்வார்கள்! மேலான செல்வங்களைப் பெறும் நிலை வந்தால், மற்றவர்களின் துயரைப் போக்குவதிலும் முனைப்பு காட்டுவர்.

    பெரும்பாலும் இவர்களுக்கு வைத்தியத் தொழில் பலிதம் ஆகும். தனக்கு உதவியவரை உயிர் உள்ளவரை மறக்க மாட்டார்கள். மனதில் ஏற்படும் கருத்துக்களை ஒருமுகப்படுத்திக்கொண்டால், வெற்றி மேல் வெற்றி கிட்டும்.

    `L’: இந்த எழுத்தின் ஆதிக்க எண்: 3. ஆதிக்கக் கிரகம்: குரு.

    இவ்வெழுத்தை முதல் எழுத்தாகவோ, அதிகம் இருக்கும்படியோ பெயர் அமைந்தவர்கள் நினைத்த காரியத்தைச் சாதிப்பார்கள். அதேநேரம் சிற்சில தருணங்களில் காரியவாதிகளாகவும் விளங்குவார்கள். ஞாபகசக்தி அதிகம் கொண்டவர்கள்.

    தனது குறிக்கோளை நிறைவேற்ற எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். மற்றவர்களைப் பயன்படுத்தியே முன்னுக்கு வந்துவிடுவார்கள் எனலாம். முதலீடு இல்லாமல் முன்னேற்றம் அடைவார்கள். அரசியலில் இவர்களைத் தோற்கடிப்பது கடினம். பணம் படைத்த வர்களின் நட்பு இவர்களுக்குக் கிடைக்கும்.

    Previous Next

    نموذج الاتصال