No results found

    சத் களத்திர யோகம்


    களத்திரம் என்றால் வாழ்க்கைத் துணை என்று அர்த்தம். கணவன் என்றால் மனைவியையும் மனைவி என்றால் கணவனையும் குறிப்பிடும் களத்திரம் என்பது அனைவருக்கும் மனம்போல் மாங்கல்யமாக அமைவதற்கு சத் களத்திர யோகம் ஜாதக ரீதியாக அமைந்திருக்க வேண்டும். ஜோடி மாடு ஜோடி கடுக்கன் போன்றவை கூட ஒரே மாதிரியாக வாய்ப்பது இல்லை என்று பெரியவர்கள் குறிப்பிடுவது வழக்கம். அதன் அடிப்படையில் மனதுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை கிடைக்க சத் களத்திர யோகத்தை குறிக்கும் கிரக அமைப்புகள் ஒருவரது ஜெனன கால ஜாதகத்தில் பின் வருமாறு அமையவேண்டும்.

    களத்திர ஸ்தானம் என்று சொல்லப்படும் ஏழாம் வீட்டுக்கு உடைய கிரகம் அல்லது களத்திரகாரகன் என்று சொல்லப்படும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் குரு அல்லது புதன் ஆகிய சுபக்கிரகங்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும். அவ்வாறு இணைப்பு பெறாத நிலையில் களத்திர ஸ்தானம் களத்திர ஸ்தான அதிபதி அல்லது சுக்கிரன் ஆகிய கிரகங்களை குரு அல்லது புதன் பார்வை செய்வது விஷேசம். இப்படிப்பட்ட கிரக அமைப்புகள் ஒருவருக்கு இருக்கும்பட்சத்தில் மனம் போல் மாங்கல்யம் என்ற வகையில் சத் களத்திர யோகம் ஏற்படும்.

    Previous Next

    نموذج الاتصال