No results found

    கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல்


    தேவையான பொருட்கள்:

    சேனைக்கிழங்கு - 250 கிராம்

    துருவிய தேங்காய் - கால் கப்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * சேனைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக நறுக்கி நன்றாக கழுவிக்கொள்ளவும்.

    * சேனைக்கிழங்கை குக்கரில் போட்டு, அதில் 1/4 கப் நீரை ஊற்றி, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

    * பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், சாம்பார் தூள் சேர்த்து சில நொடிகள் வறுத்து, வேக வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து, சிறிது உப்பைத் தூவி நன்கு ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.

    * கிழங்குடன் மசாலா அனைத்தும் ஒன்று சேர்ந்ததும், அதில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கினால், கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் தயார்.

    Previous Next

    نموذج الاتصال