No results found

    எந்த ராசிக்கு எந்தக் கல்? - கட்டை விரலில் மோதிரம் அணியலாமா?


    ஒவ்வொரு ராசியினருக்கும் - ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான கற்களை நமக்கு வழங்கியிருக்கிறது ஜோதிட சாஸ்திரம். நவகிரக நவரத்தினக் கற்களை அணியக்கூடிய முறை என்பது ஜாதக ரீதியாக நாம் பார்த்து அணியவேண்டும். அதுவே நமக்கு நன்மையைக் கொடுக்கும். ஒவ்வொருவருடைய லக்னம் என்ன - ராசி என்ன - என்ன தசா புத்தி நடக்கிறது - எந்தந்த கிரகம் பலமாக இருக்கிறது - என்னென்ன காரியங்களுக்காக நாம் அணிய வேண்டும் என்பதை ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பது நமக்கு நன்மையைக் கொடுக்கும்

    ஒவ்வொரு கிரகத்திற்குரிய கற்கள்:

    சூரியன் - மாணிக்கம்

    சந்திரன் - முத்து

    செவ்வாய் - பவளம்

    புதன் - பச்சை மரகதம்

    குரு - கனக புஷ்பராகம்

    சுக்கிரன் - வைரம்

    சனி - நீலம்

    ராகு - கோமேதகம்

    கேது - வைடூரியம்

    அணியக்கூடிய முறைகள்:

    பெருவிரலில் (கட்டைவிரல்) பொதுவாக மோதிரம் அணிவதைத் தவிர்ப்பது நன்மையைக் கொடுக்கும். ஆட்காட்டி விரலில் குருவினுடைய புஷ்பராக கல் - செவ்வாயினுடைய பவளம் அணிவது நல்லது. நடுவிரலில் நீலம் மற்றும் அமிதிஸ்ட் கல்லை அணிவது நன்மையைக் கொடுக்கும். வைரத்தை மோதிர விரலில் அணிவதால் நன்மைகள் பெருகும். சுண்டுவிரலில் பச்சை அல்லது வைரம் அணிவது சிறப்பு.

    ராகு கேதுவிற்கு கல் அணிவதை ஜாதகத்தைப் பார்த்து முடிவெடுப்பதே சிறந்தது.

    குறிப்பு: இங்கு கொடுக்கக் கூடிய விஷயமானது பொதுவானவை மட்டுமே!

    இனி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் என்னென்ன கற்கள் அணிவதால் நன்மைகள் உண்டாகும் என்பதைப் பார்க்கலாம்.

    மேஷ ராசிக்காரர்கள் பவளம் வைரம் மற்றும் புஷ்பராக கல் அணியலாம்.

    ரிஷப ராசிக்காரர்கள் வைரம் மற்றும் பச்சை அணியலாம்.

    மிதுன ராசிக்காரர்கள் பச்சை மற்றும் வைரம், முத்து அணியலாம்.

    கடக ராசிக்காரர்கள் முத்து, கனக புஷ்பராகம் அணியலாம்.

    சிம்ம ராசிக்காரர்கள் மாணிக்கம், புஷ்பராகம் அணியலாம். எந்தக் காரணத்தை கொண்டும் இவர்கள் வைரம் அணியக்கூடாது.

    கன்னி ராசிக்காரர்கள் பச்சை மரகதம், வைரம் அணியலாம்.

    துலாம் ராசிக்காரர்கள் வைரம் நீலம் அணியலாம்.

    விருச்சிக ராசிக்காரர்கள் பவளம் கனக புஷ்பராகம் அணியலாம்.

    தனுசு ராசிக்காரர்கள் கனக புஷ்பராகம் நீலம் அணியலாம்.

    மகர ராசிக்காரர்கள் நீலம் வைரம் அணியலாம். இவர்கள் வைரம் அணிவது மிகுந்த நன்மையை கொடுக்கும்.

    கும்ப ராசிக்காரர்கள் வைரம் நீலம் அணியலாம்.

    மீன ராசிக்காரர்கள் கனக புஷ்பராகம் முத்து வைரம் அணியலாம்.

    இங்கு நான் கொடுத்திருப்பது பொதுவானவை. மேலும் உங்கள் ஜாதகத்துக்குத் தக்கபடி அந்தந்தக் கல்லை பயன்படுத்திக் கொண்டால், இன்னும் வளமும் செழுமையும் பெறுவீர்கள் என்பது உறுதி!

    Previous Next

    نموذج الاتصال