காளி அன்னையின் காயத்திரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வர வேண்டும். இவ்வாறு சொல்வதால், காளியானவள் நமக்கு தைரியத்தை கொடுப்பாள்.
காளி காயத்திரி மந்திரம்:
‘ஓம் காளியை ச வித்மஹே
ச்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோர ப்ரசோதயாத்’
பொருள்:- காளி தேவியை அறிவோமாக. மயானத்தில் வசிக்கும் அவள் மீது தியானம் செய்கிறோம். கோர ரூபமுடைய அவள் நம்மை காத்து அருள் செய்வாளாக.
காளிதேவியை வீட்டிலோ, ஆலயத்திலோ வழிபடும்போது, முதலில் காளிதேவியை, அர்ச்சனைகள் செய்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். பின்னர் அன்னையின் காயத்திரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வர வேண்டும். இவ்வாறு சொல்வதால், காளியானவள் நமக்கு தைரியத்தை கொடுப்பாள். அறிவாற்றலை வளர்ப்பாள். பகைவர்கள் விலகுவார்கள். வேண்டும் வரங்கள் அருள்வாள்.