No results found

    நந்தீஸ்வரர் காயத்ரி மந்திரம்


    சிவன் ஆலயங்கள் அனைத்திலும் சிவன் சன்னிதிக்கு முன்பாக நந்தி அமைக்கப்பட்டிருக்கும். இவரது அனுமதி பெற்றே சிவதரிசனம் செய்ய வேண்டும். ‘நந்தி’ என்ற சொல்லுக்கு ‘எப்பொழுதும் ஆனந்த நிலையில் இருப்பவர்’ என்று பொருள். நந்தியம்பெருமான் சிவ பெருமானிடம் இருந்து உபதேசம் பெற்றவர்.

    அவரிடம் இருந்து சிவாகமங்களைத் தெரிந்து நமக்கு அருளினார் என்று கூறப்படுகிறது. எனவே நந்தியம்பெருமானே, சைவ சமயத்திற்கு முதல் குருவாவார். நந்தியிடம் இருந்து சனத்குமாரரும், சனத்குமாரரிடம் இருந்து சத்திய ஞானதெரிசனிகளும், அவரிடம் இருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடம் இருந்து மெய்கண்டாரும் உபதேசம் பெற்றனர். இவர்களே ‘குரு பரம்பரை’ அல்லது ‘திருக்கயிலாய பரம்பரை’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

    ‘ஓம் தத்புருஷாய வித்மஹே

    சக்ர துண்டாய தீமஹி

    தந்நோ நந்திஹ் ப்ரசோதயாத்’

    என்ற நந்தீஸ்வரருக்கான காயத்ரி மந்திரத்தை, நந்தியை வலம் வந்து வணங்கிய பிறகு 108 முறை உச்சரிக்க வேண்டும். ‘பரம புருஷனை நாம் அறிவோம். சக்ர துண்டன் மீது தியானம் செய்கிறோம். நந்தியம் பெருமானாகிய அவன், நம்மை காத்து அருள்வான்’ என்பது இந்த மந்திரத்தின் பொருள்.

    இந்த மந்திரத்தை உச்சரித்து நந்தியை வழிபடுவதன் மூலம், குருவருள் கிடைக்கும். மேலும் துன்பங்கள் விலகும், வியாதிகள் நீங்கும், ஆனந்த வாழ்வு அமையும். நந்தி தேவரை வணங்கி வழிபடுவதால் சிவபெருமானின் ஆசியும் கிடைக்கும்.

    Previous Next

    نموذج الاتصال