No results found

    விநாயகரின் எலி வாகன வரலாறு


    இந்திரனது சபையில், மகாஞானியான வாமதேவரை கிரௌஞ்சகன் என்ற கந்தருவன் அவமதித்து பேசிவிட்டான். அதனால் வெகுண்ட அவர் அவனை எலியாக மாற சாபம் தந்தார். எலியாக மாறிய கந்தருவன் சீற்றம் கொண்டு முனிவர்களுக்கு பல தொல்லைகளை கொடுத்தான். பராசர முனிவரின் ஆசிரமத்தை பாழ்படுத்தி விட்டான். பராசரர் விநாயகரை வேண்ட, அவர் எலி ரூபத்தில் இருந்த கந்தருவனின் கொட்டத்தை அடக்கினார். கர்வம் நீங்கப் பெற்ற கந்தர்வன் விநாயகப் பெருமானுக்கு எலி வடிவில் வாகனமாக ஆனான். அன்று முதல் விநாயகர் பெருமானுக்கு 'மூஷிக வாகனன்’ என்று பெயர் வந்தது.

    Previous Next

    نموذج الاتصال