1. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம்:
ஓம் |ஐம்|க்லீம்|சௌம்|
இதில் சௌம் என்பதை “சௌஹ¨ம் “என்று சொல்லுவது சிறந்தது.
ஐம் - என்ற பீஜம் வாக்பீஜம் எனப்படுகிறது.- பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சம்.இம் மந்திரம் நல்ல வாக்குவன்மை (பேச்சாற்றல்), வாக்குபலிதம்,ஞானம்,அறிவு இவற்றைத் தரும்.
க்லீம் - என்ற பீஜம் காமராஜபீஜம் எனப்படும்.இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி, மன்மதன் இவர்கள் அடக்கம்.இம்மந்திரம் நல்ல செல்வம், செல்வாக்கு, கௌரவம், வசீகரசக்தி, உடல், மன பலம் இவற்றை தரும்.
சௌஹம் - இப்பீஜத்தில் சிவன்,பார்வதி,முருகன் இவர்கள் அடக்கம். சௌம் என்ற பீஜத்தில் இருந்தே சௌபாக்கியம் என்ற வார்த்தை தோன்றியதாக வேதம் கூறுகிறது.இப்பீஜம் சௌபாக்கியம் நிறைந்த வளவாழ்வினைத்தரும்.
இவ்வாறு மும்மூர்த்திகளின் பீஜத்தையும் ஒருங்கே கொண்டவள் வாலைத்தாய் என்ற ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அன்னை.இவள் மந்திரத்தை முறையாய் ஜெபித்து வந்தால் ஆன்மீகத்திலும், வாழ்விலும் உயர்ந்த நிலையை அடையலாம்.
2.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி மந்திரம்:
ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||
3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி மந்திரம்:
ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் சௌம்||
முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.
வாலையடி சித்தருக்கு தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பால திரிபுரசுந்தரியின் அருள் நம் அனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட, உறுதுணையாய் நிற்க உதவுகிறது. எனவே ஆத்ம ஞானம் பெற விரும்புபவர்கள், ஆத்மாவை மேம்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் தவறாமல் அவசியம் பாலாவை வழிபட வேண்டும்.