No results found

    நீங்கள் எந்த யோகத்தில் பிறந்தவர்கள்?


    பஞ்சாங்கத்தில் கூறப்படும் 27 விதமான யோகத்தில் ஏதேனும் ஒரு யோகத்தில் நாம் பிறந்திருப்போம். நாம் பிறந்த யோகம் நன்றாக இருந்தால் நமக்கு யோகமான வாழ்க்கை அமையும். விஷ்கம்ப நாம யோகத்தில் நீங்கள் பிறந்திருந்தால் செல்வ வளம் பெற்றவர்களாக விளங்குவீர்கள். சுற்றத்தார் போற்றும் வாழ்வு உங்களுக்கு அமையும். சவுபாக்கிய நாம யோகத்தில் நீங்கள் பிறந்திருந்தால் அறிவு வளம், செல்வ வளம் பெற்றவராகவும், சகல சவுபாக்கியத்துடனும் வாழ்பவர்களாக விளங்குவீர்கள். விருத்திநாம யோகத்தில் நீங்கள் பிறந்திருந்தால் உங்களுக்கு தலைமைப் பதவிகள் உண்டு. அரசியல் மற்றும் பொதுநலத்தில் தலைமைப் பொறுப்புகள் வந்து சேரும். அமைச்சர், எம்.எல்.ஏ. போன்ற பொறுப்புகளும், சுயஜாதகத்தில் கிரகங்களின் பலத்தைப் பொறுத்தே வந்து சேரும்.

    Previous Next

    نموذج الاتصال