No results found

    மார்பகங்களில் கடுமையான வலியா?


    மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு மார்பகங்களில் வலி, வீக்கம், கனத்த உணர்வு போன்றவை இருக்கும். இந்த அறிகுறிகள் மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாட்கள் முன் ஆரம்பித்து, மாதவிடாய் காலத்தில் உச்சத்தை அடைந்து பிறகு தானாகவே சரியாகி விடக்கூடியவை. பயப்படத் தேவையில்லை. அதற்காக இப்படி எல்லா அறிகுறிகளையுமே சாதாரணம் என நினைத்து அலட்சியப்படுத்தவும் கூடாது. கடைப்பிடிக்க வேண்டியவை: குறைந்த கொழுப்புள்ள உணவுகளையும் சத்தான உணவுகளையும் சாப்பிடவும். இறுக்கமான உள்ளாடைகள் அணியாதீர்கள். இரவில் தூங்கும்போது உள்ளாடைகளை கழற்றிவிட்டு வசதியாக தூங்குங்கள். டீ, காஃபி குடிக்க வேண்டாம். மார்பகத்தில் சுடுதண்ணீர் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துவிடவும்.

    Previous Next

    نموذج الاتصال