No results found

    அடுப்பில்லா சமையல்: சிவப்பு அவல் வாழைப்பழ புட்டிங்


    தேவையான பொருட்கள் 

    சிவப்பு அவல் - 1 கப் 

    நாட்டுச்சர்க்கரை - தேவைக்கேற்ப 

    தேங்காய் துருவல் - கால் கப் 

    செவ்வாழைப்பழம் - 2 

    செய்முறை 

    சிவப்பு அவலை நன்றாக கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். அவல் நன்றாக குழைய ஊறக்கூடாது. ஊறிய அவலை நன்றாக தண்ணீரை பிழிந்து எடுத்து விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நாட்டுச்சர்க்கரை, தேங்காய் துருவல், செவ்வாழைப்பழத்தை போட்டு நன்றாக பிசைத்து உருண்டைகளாக பிடித்து குழந்தைகளுக்கு கொடுக்கவும். இப்போது சத்தான சுவையான சிவப்பு அவல் வாழைப்பழ புட்டிங் ரெடி.

    Previous Next

    نموذج الاتصال