No results found

    சொந்த வீட்டுக்கனவை நிறைவேற்றும் வருங்கால வைப்பு நிதி


    வீடு மற்றும் வீட்டுமனை வாங்க ஊழியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து 90 சதவிகித தொகையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற திட்டம் சொந்த வீட்டு கனவில் உள்ள பலருக்கும் பயனளிப்பதாக உள்ளது. அதாவது, ஊழியர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், மத்திய அரசின் விதிமுறைகளின்கீழ் அவர்களது இ.பி.எப் சேமிப்பிலிருந்து ஒருமுறை பணம் எடுத்து பிளாட் வாங்குவதற்கு அல்லது மனையில் வீடு கட்டுவதற்கான தவணைத்தொகை செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் இந்த அறிவிப்பின் மூலம் 2022-ல் அனைவருக்கும் வீடு என்ற பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் 4 கோடி இ.பி.எப் உறுப்பினர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே பதிவு செய்யப்பட்ட ஒரு கூட்டுறவு சங்கம் முலமாகவோ அல்லது இ.பி.எப் உறுப்பினர்கள் தாங்களாகவே தொடங்கப்பட்ட கூட்டுறவு சங்கம் மூலமாகவோ அவர்களது சேமிப்பிலிருந்தே சொந்த வீடு வாங்கலாம் அல்லது வீட்டின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.

    வீட்டுமனை திட்டத்தில் அல்லது வீட்டு கட்டுமான திட்டத்தில் பதிவு பெற்ற ஒரு கூட்டுறவு சங்கம் மூலம் வாங்கும்போது அதில் இ.பி.எப் கணக்கு வைத்துள்ள 9 நபர்களாவது வீடு வாங்கும் உறுப்பினரோடு இணைந்து வாங்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச பயன்பாடு இதற்கு முன்னதாக 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்கள் அவர்களது 36 மாத சம்பளத்துக்கு (பேசிக் மற்றும் டி.ஏ சேர்ந்த தொகை) இணையான தொகையை பி.எப் சேமிப்பிலிருந்து எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்திய அறிவிப்பில் இ.பி.எப் திட்டத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சேமிப்பு செய்து வந்த உறுப்பினர்கள் சொந்த வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதற்காக 90 சதவிகித தொகையை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், கடன் தொகையை முழுவதுமாகவோ அல்லது பகுதி அளவிலோ திருப்பி செலுத்துவதற்காக அவர்களது மாதாந்திர பி.எப் தொகையை பயன்படுத்திக்கொள்ளும் விருப்பத் தேர்வு அனுமதியும் அளிக்கப்படுவதாக இ.பி.எப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடு குறிப்பாக, வீட்டு மனைகள் வாங்குவதற்கு அல்லது சொந்த வீடு கட்டுவதற்கு இ.பி.எப்.ஓ அலுவலகம் நேரடியாக தொகையை இ.பி.எப் உறுப்பினர்களிடம் தராது. அதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கம், ஹவுசிங் ஏஜென்சி அல்லது சம்பந்தப்பட்ட பில்டர் ஆகியவர்களிடம் மட்டுமே வீடு அல்லது வீட்டு மனைக்கான தொகை தரப்படும். அவ்வாறு அளிக்கப்பட்ட பணம் மூலம் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வீடுகளின் கட்டுமான பணிகள் முடிக்கப்படவில்லை அல்லது குறிப்பிட்ட வீட்டு மனை ஒதுக்கப்படவில்லை என்ற நிலை ஏற்படலாம். அந்த நிலையில் இ.பி.எப் சேமிப்பிலிருந்து பெறப்பட்ட தொகையை மீண்டும் உறுப்பினர் கணக்கில் 15 நாட்களுக்குள் டெபாசிட் செய்யப்படுவதை அவர்கள் உறுதி செய்ய உரிமை பெற்றவர்கள் ஆவார்கள் என்றும் இ.பி.எப் தலைமை அலுவலக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال