No results found

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சாமி வீதி உலா


    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடக்கிறது. விழாவில் நேற்று அதிகாலையில் தாணுமாலயசாமி ரிஷப வாகனத்தில் தங்க ஆபரணங்கள் சூட்டப்பட்டு வீதி உலா வந்தார். இதற்காக சாமி கோவிலில் இருந்து வெளியே வந்த போது போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தாணுமாலயசாமி 4 ரத வீதிகளில் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இந்தநிலையில் நேற்று இரவும் சாமிக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் அணிவிக்கப்பட்டு பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. அதன்படி சாமி கோவிலில் வெளியே இறங்கி மாடத்தெருவில் சுற்றி வரும்போது 10 மணிக்கு திடீரென மின்தடை ஏற்பட்டது. எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென மின்தடை ஏற்பட்டதும், போலீஸ் பாதுகாப்பு போடப்படாததும் பக்தர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது

    Previous Next

    نموذج الاتصال